தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் வெயிலின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் உச்சத்தைத் தொடும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எல் நினோ விளைவு கடுமையான கோடை காலத்தைக் குறிக்கிறது. பிரதீப் ஜான், ஏப்ரல் மாதத்தில் சென்னையில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என்று கணித்துள்ளார் மேலும் மார்ச் மாத வறட்சியை ஈடுகட்ட மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல்-மே மாதத்திற்கு முன்னதாகவே சென்னை மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெயிலின் வெப்பம் சுட்டெரித்து வருகிறது. ஏற்கெனவெ, கடுமையான வெயிலின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொட்டு கொளுத்தி வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பகல்நேர வெப்பநிலை சாதாரணமாக இருக்கும் இடத்தில் வானிலை மென்மையாகவும் தாங்கக்கூடியதாகவும் உள்ளது. ஆனால், சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை ஏப்ரல் இறுதியில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் நிலையங்களில் திங்கள்கிழமை 33.1 டிகிரி செல்சியஸ் மற்றும் 34 டிகிரி செல்சியஸ் வெயிலின் வெப்பநிலை பதிவானது. இது இயல்பை விட 0.6 டிகிரி மற்றும் 0.8 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது. ஈரோடு, கரூர், மதுரை, சேலம், திருப்பத்தூர் போன்ற பல மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது.
சென்னையில் கிழக்குக் காற்று நகருக்குள் நுழைவதால் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர். “ஏப்ரல் 11 வரை, தற்போதைய வானிலை தொடரும் என்றும் கடலோர பகுதிகளில் 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
அடுத்த 48 மணிநேரத்திற்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 34 - 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 - 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் வெப்பநிலை அதிகரிக்கலாம். வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடாமல் இருக்கலாம், ஆனால், வெப்பநிலை 35 -37 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும், எல் நினோ விளைவு இருப்பதால், கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாக உள்ளது. இந்த ஆண்டு கோடை கடுமையாக இருக்கும்” என்று ஸ்கைமெட் வானிலையின் தலைமை வானிலை ஆய்வாளர் மகேஷ் பலாவத் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், தமிநாடு வெதர்மேன் பிரதீப் ஜான், “தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்கள் ஏப்ரல் மாதத்தில் கடலோரப் பகுதிகளை விட தொடர்ந்து வெப்பமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் சென்னையில் வெப்பநிலை சுமார் 35 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கலாம். மார்ச் மாதம் நகரின் மிகவும் வறண்ட மாதங்களில் ஒன்றாக முடிவடையும். ஆனால், மழை பெய்யும் வாய்ப்புகள் இருப்பதால் ஏப்ரல் அதை ஈடுகட்டலாம்” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“