Advertisment

செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு தலைவருக்கு 2 மாத ஜெயில் : ஐகோர்ட் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழுத் தலைவருக்கு, இரண்டு மாத சிறைதண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai high court

chennai high court

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழுத் தலைவருக்கு, இரண்டு மாத சிறைதண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை பரங்கிமலையில் புனித ஜோசப் பிரான்சிஸன் சகோதரிகள் அமைப்புக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகம், பதிவு செய்யப்படாததால் செங்கல்பட்டு குழந்தைகள் நலக் குழு, காப்பகத்தில் இருந்து ஐந்து சிறார்களை அழைத்துச் சென்று தனியார் மையத்தில் தங்கவைத்தது.

ஐந்து குழந்தைகளையும் மீட்டுத் தரக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்றம்

ஐந்து சிறார்களையும் உடனடியாக மீண்டும் அதே இல்லத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழுத் தலைவர் மணிகண்டனுக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதது மட்டுமல்லாமல், மன்னிப்பு கேட்க கூட அவர் முன் வரவில்லை. இது போன்ற நடவடிக்கைகளை அனுமதித்தால் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடும் எனக் கூறி மணிகண்டனுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற மணிகண்டன் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி, தண்டனை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment