/indian-express-tamil/media/media_files/gXEvuE8b3Zh3stbfajbC.jpeg)
Chengalpattu accident
செங்கல்பட்டு அருகே மதுராந்தகத்தில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது.
விழுப்புரத்தில் இருந்து சென்னை பூந்தமல்லிக்கு கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அதிவேகத்தில் வந்த ஆம்னி பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில் ஆம்னி பஸ்சின் முன்பக்கம் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஆம்னி பஸ்சில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதற்கிடையே, விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ் மீது முசிறியில் இருந்து சென்னைக்கு வந்த அரசு விரைவு பஸ் ஒன்று மோதியது.
இந்த விபத்துக்களில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிட்டதட்ட 3 மணி நேரத்திற்கு பிறகே விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பயங்கர விபத்தில், திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ் உள்ளிட்ட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியானது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.