நீட் தேர்வு பயத்தில் மேலும் ஒரு மாணவி தீக்குளிப்பு: மருத்துவமனையில் சிகிச்சை

Chengalpattu student attempted suicide for fear of failing NEET exam: நீட் தேர்வு தோல்வி பயத்தில் தற்கொலைக்கு முயன்ற செங்கல்பட்டு மாணவி; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Neet exam, neet exam suicides, vellore students

நீட் தேர்வு தோல்வி பயத்தால் செங்கல்பட்டு-ஐ சேர்ந்த 17 வயது மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன். இவர் சேத்துப்பட்டு எம்.சி.சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷிபா மாடம்பக்கத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் அனு சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

மருத்துவ படிப்பில் சேர விரும்பிய அனு கடந்த 12 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ஆவடி நீட் தேர்வு மையத்தில் எழுதியுள்ளார். முதன் முறையாக நீட் தேர்வு எழுதிய இவர், தோல்வி பயம் காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து, மாணவி அனு 40 சதவீத தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவி அனுவை, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஏற்கனவே, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சௌந்தர்யா ஆகியோர், இந்தாண்டு நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், தற்போது, மாணவி அனு தற்கொலைக்கு முயன்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chengalpattu student attempted suicide for fear of failing neet exam

Next Story
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைvigilance department conducts raid in former ministers KC Veeramani house, vigilance department raid in AIADMK leader KC Veeramani house, அதிமுக முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை, கேசி வீரமணி, அதிமுக, லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை, DVAC raid in KC Veeramani house, Vigilance raid at kc veeramani house, jolarpet, tiruppathur, chennai, thiruvannamalai
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com