செங்கல்பட்டு – தாம்பரம் ரயில் சேவை இன்று நிறுத்தம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

செங்கல்பட்டு – தாம்பரம் இடையே இன்று காலை முதல் மாலை வரை மின்சார இரயில்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சுரங்கப்பாதை பகுதியில் பொறியியல் பணிகள் இன்று நடைபெறுவதன் காரணமாக அப்பாதையில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து காலை 8.25 மணி முதல் மாலை 6.40 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான மின்சார […]

Tamil Nadu news today live updates chennai rains
Tamil Nadu news today live updates chennai rains

செங்கல்பட்டு – தாம்பரம் இடையே இன்று காலை முதல் மாலை வரை மின்சார இரயில்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வண்டலூர் மற்றும் கூடுவாஞ்சேரி பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சுரங்கப்பாதை பகுதியில் பொறியியல் பணிகள் இன்று நடைபெறுவதன் காரணமாக அப்பாதையில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து காலை 8.25 மணி முதல் மாலை 6.40 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை இன்று சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு, மீண்டும் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரைக்கே திருப்பி அனுப்பப்பட உள்ளது. எனவே தாம்பரத்தில் இருந்து ரயில் வழியாக செங்கல்பட்டு பகுதியை நோக்கி பயணிப்பவர்கள் மாற்று வழியில் பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chengalpattu tambaram train services stopped

Next Story
ஆளுநர் மாளிகை முற்றுகை: ஸ்டாலின் உட்பட 1,111 திமுகவினர் மீது வழக்குப் பதிவு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com