சென்னையில் நிறுவனங்களின் பதிவாளர் (ROC) துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) Govche India Pvt Ltd என்ற பெயரில் பதிவுசெய்யப்பட்ட கணக்குப்பிள்ளை.காம் என்ற தணிக்கை நிறுவனத்தின் பதிவு அலுவலகத்தில் சோதனை நடத்தினார்.
இந்த ஆய்வில், கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்களின் பதிவாளர் மற்றும் ICLS அதிகாரிகள் குழு மாலை 4 மணி முதல் ஈடுபட்டனர்.
கணக்குப் பிள்ளை.காம் என்ற இணைய அலுவலகம் ஆதம்பாக்கத்தில் மேற்கு கரிகாலன் தெருவில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் நடந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
இவர்கள், போலி ஆவணங்களைப் பதிவுசெய்து, போலி ஆவணங்களில் கையொப்பமிட்டு சான்றளித்துள்ளனர். மேலும் நகரில் உள்ள ஒரு முக்கிய பட்டயக் கணக்காளர் பெயரையும் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும் ஆரூத்ரா கோல்ட் உள்ளிட்ட டெபாசிட் திரட்டும் போலி நிறுவனங்களோடும் தொடர்பில் இருந்தனர். நிறுவனங்கள் சட்டம், 2013 இன் பிரிவு 209 இன் கீழ் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ROC க்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/