சென்னையின் 46வது சர்வதேச புத்தகக் கண்காட்சியை வருகின்ற 2023ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் வைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
2023ஆம் ஆண்டின், ஜனவரி மாதம் 6ஆம் தேதி சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெறவிருக்கிறது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெறவிருக்கும் இந்த புத்தகக் கண்காட்சியை ஜனவரி 22-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த திருவிழாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் நடக்கும் இந்த புத்தக கண்காட்சியில் 800 ஸ்டால்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில், இம்முறை திருநங்கைகளுக்கு ஓர் விற்பனையகம் ஒதுக்க முடிவு செய்திருப்பதாக அமைப்பு குழு தெரிவித்திருக்கிறது.
மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் என அனைத்து தரப்பினரும் புத்தக கண்காட்சிக்கு வருகை தர இருப்பதால், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil