சென்னையில் புதிய ஆறு மகளிர் காவல் நிலையங்களை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார்.
சென்னையில் கோட்டூர்புரம், தரமணி, நீலாங்கரை, மீனம்பாக்கம், புழல் மற்றும் கோயம்பேடு ஆகிய இடங்களில் மகளிர் காவல் நிலையங்கள் உள்ளது.
புதிதாக தொடங்கப்பட்ட காவல் நிலையங்களில் ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துணை ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் உட்பட 8 காவலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
"மாநில உள்துறைக்கு அனுப்பப்பட்ட பரிந்துரைகளின்படி அவர்கள் இந்த புதிய காவல் நிலையங்களை கட்டியுள்ளனர்" என்று கமிஷனர் ஷங்கர் ஜிவால் கூறினார்.
சென்னையில் மொத்தம் 101 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன. தற்போது 37 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன.
கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையம், கோட்டூர்புரம் மற்றும் அபிராமபுரம் காவல் நிலைய எல்லைகளை உள்ளடக்கியது. தரமணி அனைத்து மகளிர் காவல் நிலையம் தரமணி மற்றும் துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லைகளை உள்ளடக்கியது.
நீலாங்கரை மற்றும் திருவான்மியூர் காவல் நிலைய எல்லைகளை, நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
மீனம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம், விமான நிலையம் மற்றும் மீனம்பாக்கம் காவல் நிலையத்தை கையாளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புழல் மற்றும் மாதவரம் காவல் நிலையங்கள் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தால் கண்காணிக்கப்படும் என்றும், கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையம் கோயம்பேடு மற்றும் கோயம்பேடு காவல் நிலையங்களின் அதிகார வரம்புகளைக் கையாளும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil