ஏபிவிபி தலைவர் மீது பெண் புகார்: போலீஸ் விசாரணை!

அறுவை சிகிச்சையில் பயன்படுத்திய மாஸ் மற்றும் இதர குப்பைகள் தனது வீட்டு வாசலில் விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.

அறுவை சிகிச்சையில் பயன்படுத்திய மாஸ் மற்றும் இதர குப்பைகள் தனது வீட்டு வாசலில் விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
abvp dr subbiah shanmugam

abvp dr subbiah shanmugam

abvp dr subbiah shanmugam : கார் பார்க்கிங் காரணமாக எழுந்த மோதலை தொடர்ந்து, ஏ.பி.வி.தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம் மீது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை ஆலந்தூர் காவல் நிலையத்தில் பெண் அளித்திருக்கும் புகாரில் டாக்டர் சண்முகம் அவரின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்தாகவும், அறுவை சிகிச்சையில் பயன்படுத்திய மாஸ் மற்றும் இதர குப்பைகள் தனது வீட்டு வாசலில் விட்டு சென்றதாகவும் கூறியுள்ளார். இதுக் குறித்த சிசிடிவி காட்சிகளையும் அவர் சமர்பித்துள்ளார்.

Advertisment

62 வயது மதிக்கத்தக்க அந்த பெண், சுப்பையா வசிக்கும் அதே குடியிருப்பில் வசித்து வருகிறார். கார் பார்க்கிங் தொடர்பாக இந்த மோதல் வெடித்துள்ளது. சுப்பையா, அந்த பெண்ணுக்கு சொந்தமான இடத்தில் கார் பார்க்கிங் செய்ய கேட்டுள்ளார். அதற்கு அவர், ஒருகுறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில்தான் தான் டாக்டர் சுப்பையா, பெண்ணின் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக,காவல் நிலையத்தில் புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி ஆதாரத்துடன் கடந்த ஜூலை 11 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் இவ்வளவு பெரியதாக வெளியில் தெரிய காரணம், அந்த பெண்ணின் மருமகன், பிரபல ஸ்டாண்டப் காமெடியனும் கர்நாடக இசை கச்சேரி ஒருங்கிணைப்பாளருமான பாலாஜி விஜயராகவன் தன்னுடைய அத்தைக்கு இதுவரை எந்த நிதியும் கிடைக்கவில்லை என குரல் கொடுத்தது தான். இதுக் குறித்து அவர் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார்.

பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் இதுவரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதுக்குறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணரும், ஏ.பி.வி.பி தலைவருமான சுப்பையா கூறியதாவது, “என் மீது தவறான நோக்கத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்.சிசிடிவி காட்சிகள் பொய்யாக சித்தரிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Advertisment
Advertisements

இதுக்குறித்து பேசிய, மாநில ஏ.பி.வி.பி செயற்குழு தலைவர், நிதி திருப்பதி, “சுப்பையா மீது வைக்கப்பட்டிருக்கும் புகார் தொடர்பாக விசாரித்தோம்., இரு தரப்பினருக்கும் இடையில் கார் பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைதான் இத்தனைக்கும் காரணம் என தெரிந்தது. இந்த சம்பவத்தில் இருதரப்பினர் இடையில் தவறு இருப்பதாக தெரிகிறது. “ என்று கூறினார்.

சுப்பையா மீது அந்த பெண் அளித்திருக்கும் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, “சுப்பையா முதலில் என்னிடம் உங்களின் 2 இடத்தில் ஒரு இடத்தை நான் கார் பார்க்கிங் செய்ய பயன்படுத்திக் கொள்கிறேன் என்றார். நான், அதற்கு சரி, அதற்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட வாடகையை தந்துவிடுங்கள் என்றேன். உடனே ஆத்திரம் அடைந்த அவர், கார் பெல்ட் மீது எட்டி உதைத்தார். இருவருக்கும் வார்த்தை தகராறு முற்றியது.

பின்பு, என் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்தினார். அதுமட்டுமில்லை அறுவை சிகிச்சையில் பயன்படுத்திய மாஸ்களை வாசலில் தூக்கி வீசினார். இதற்கான ஆதாரம் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: