Chennai Tamil News: வருகின்ற அக்டோபர் மாதம், பண்டிகைகள் மற்றும் அரசு விடுமுறைகள் அதிகமாக வரும் காரணத்தினால், வெளி ஊர்களுக்கு பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணம் எதிர்பாராவிதத்தில் அதிகரித்துள்ளது.
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல வழக்கமாக 4,500 ரூபாய்க்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது, 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, ஜெய்ப்பூருக்கு 5 ஆயிரம் ரூபாயில் இருந்து 24 ஆயிரம் ரூபாய் வரையிலும், கொல்கட்டாவிற்கு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 22 ஆயிரம் ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது.
அகமதாபாத்திற்கு செல்லும் விமான கட்டணம் 9 ஆயிரத்திலிருந்து 11 ஆயிரம் ரூபாய் வரையிலும், புனேவிற்கு 9 ஆயிரம் ரூபாய் வரையிலும், மும்பைக்கு 16 ஆயிரம் ரூபாய் வரையிலும், மதுரைக்கு ரூபாய் 5 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரையிலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மேலும், சென்னையிலிருந்து திருச்சி, கோயம்பத்தூர், திருவனந்தபுரம், பெங்களூரு உட்பட பல நகரங்களுக்கு செல்லும் பயணிகள் கட்டணமும் அதிகரித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil