கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, சென்னையில் விமான சேவை தொடங்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, செனையில் விமான நிலையம் மூலம் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னையில் விமான சேவை தொடங்கிய போது, அதிகபட்சமாக சென்னைக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஒரு நாளைக்கு 25 விமானங்கள் வருவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது . நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய இடங்களில் இருந்து குறைந்த எண்ணிக்கையிலேயே விமானத்தை இயக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்கு அதிகப்படியான விமானங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டன.
சென்னை விமான நிலையம் மூலம் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் பயணாளிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஆங்காங்கே சிக்கி கொண்டிருந்த மக்கள் தற்போது விமானங்கள் மூலம் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.
பொது போக்குவரத்த்குக்குத் தடை, சிக்கலான இ- பாஸ் நடைமுறை, அவசர நிலை, போன்ற காரணங்களால் மாநிலத்திற்குள் செல்ல மக்ககள் விமான சேவையை பெரிதும் விரும்புகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த, ஜூலை மாதத்தில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் 1,45,671 பேர் வருகை தந்துள்ளனர். இது, முந்தைய மாதத்தை விட 6.6% சதவீத வளர்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையில் முழு ஊரடங்கு அனுமதித்த நிலையிலும் கூட, சென்னை விமான நிலையம் விதிமுறைகள்படி, தடையில்லாமல் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டது . விமானம் பயணர்கள் தங்கள் பயணச் சீட்டுகளை இ- பாஸாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக,கட்டண நிர்ணயம் மற்றும் விமானங்களில் 45 சதவீத பயணிகளுடன் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நவம்பர் 24ஆம் தேதி வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil