சென்னை உட்பட 7 விமான நிலையங்களில் விரைவு குடியேற்ற சேவை திட்டம் (பாஸ்ட் டிராக் இமிகிரேஷன்) திட்டம் இன்று (ஜன.16) தொடங்கப்படுகிறது. இமிகிரேஷன் அனுமதிக்காக பயணிகள் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் பாஸ்ட் டிராக் இமிகிரேஷன் திட்டம் தொடங்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதமே இந்த திட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பாஸ்ட் டிராக் இமிகிரேஷன் கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் இந்த திட்டம் மத்திய விமானத் துறையால் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படாத காரணத்தால் இங்கும் அது தொடங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, அகமதாபாத் ஆகிய 7 விமான நிலையங்களில் இத்திட்டம் தொடங்கப்படுகிறது. அகமதாபாத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கவும் சர்வதேச பயணத்தை தடையற்றதாகவும் பாதுகாப்பாகவும் மாற்ற இத்திட்டம் தொடங்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.