சென்னை விமான நிலைய டொமஸ்டிக் மற்றும் இன்டர்நேசனல் டெர்மினல்களில் வெளியேறும் விமான பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்திற்கு ஒவ்வொரு நாளும் 20,000-40,000 பயணிகள் வந்து செல்கின்றனர். டெர்மினல்களில் உள்ள செக் அவுட்டில் ஒவ்வொருவரும் ஒரு மணி நேரமாவது காத்துக் கிடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. பல பயணிகள் இந்த வேதனையை தங்கள் ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஒரு பயனர்," ஐயா, சென்னை விமான நிலைய செக்-அவுட் ஒரு குழப்பத்தை நோக்கி செல்கிறது . கோயில்களில் காணப்படும் வரிசைகள் கூட சிறந்ததாக இருக்கும். ஒழுங்கு இல்லை. இதை திறமையாக செய்ய நமக்கு ஏன் அதிக இடம் ஒடுக்கக் கூடாது? என்று விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சருக்கு ட்வீட் செய்துள்ளார்.
செக்- அவுட் செய்யும் இடங்களில் இன்னும் அதிகமான அலுவலர்களை நியமிக்க வேண்டும், செக் அவுட் நடைமுறையை இன்னும் வேகப்படுத்த என்று கருத்தும் நிலவுகிறது .
இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், " இடவசதியைக் கணக்கில் கொண்டு பார்த்தோமானால், டெர்மினலின் செயல்திறனை அதிகரிப்பது மிகவும் கடினம். இருந்தாலும் பல மாதங்களாக நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சென்னை விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புதிய ஒருங்கிணைந்த முனையம் திறக்கப்பட்டதும், இதுபோன்ற சிக்கல்கள் கட்டாயம் தவிர்க்கப்படும் என்று தெரிவித்தனர்.