சென்னை விமான நிலையத்தில் உள்ள புறப்பாடு முனையத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட நினைவுப் பொருட்கள் கடை மூலம் 8 பேர் கொண்ட கும்பலால் 167 கோடி ரூபாய் மதிப்புள்ள 267 கிலோ தங்கம் 2 மாதங்களில் கடத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சுங்க அதிகாரிகள் நினைவு பொருட்கள் கடையை வைத்திருக்கும் யூடியூபரான சபீர் அலி மற்றும் இரண்டு பயணிகள் உட்பட ஒன்பது பேரை கைது செய்தனர்.
சுங்கத் துறையின் வான் நுண்ணறிவு பிரிவு சந்தேகத்தின் பேரில் நினைவு பரிசு கடையின் ஊழியரை விசாரித்தது. அப்போது அவரிடம் 1 கிலோ தங்கம் தூள் வடிவில் இருப்பதைக் கண்டறிந்தது. ஒரு பயணியிடமிருந்து தங்கத்தை பெற்ற பிறகு கடைக்காரர் அதை தனது மலக்குடலில் மறைத்து வைத்திருந்தார். இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுதொடர்பாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் ஆர் சீனிவாச நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
"சபீர் அலி இரண்டு மாதங்களுக்கு முன்பு விமான நிலைய ஆணையத்தின் (AAI) மூன்றாம் தரப்பு நிறுவனமான வித்வேதா பி.ஆர்.ஜி-க்கு பெரும் தொகையை செலுத்தி கடையை வாடகைக்கு எடுத்தார். அவர் ஒரு நினைவு பரிசு கடையை முன்பக்கமாக அமைத்து, கடையை நிர்வகிக்க ஏழு இளைஞர்களை வேலைக்கு அமர்த்தினார்.
இலங்கை செல்லும் பயணிகளால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட கடத்தல் தங்கத்தை பதுக்குவதற்கு ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர். தங்கம் கழிப்பறையில் கைமாறப்பட்டு விமான நிலையத்திற்கு வெளியே உள்ள கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்கப்படும். கடை ஊழியர்கள் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி வழங்கிய அடையாள அட்டைகளை எடுத்துச் சென்றதால், அவர்கள் அடிக்கடி சோதனைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள்.
கைதானவர்களின் வாக்குமூலம் மற்றும் அவர்களின் தொலைபேசி உரையாடல்களின் அடிப்படையில், இரண்டு மாதங்களில் 167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கத்தை அந்தக் கும்பல் கடத்திச் சென்றதை சுங்கத்துறையினர் உறுதி செய்துள்ளனர். வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூரில் இருந்து தங்கம் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
சென்னை, இலங்கை மற்றும் வெளிநாடுகளில் தங்கியுள்ள தங்கக் கடத்தல் கும்பல் ஒன்று சேர்ந்து விமான நிலையத்திற்குள் ஒரு கடையை வாடகைக்கு எடுக்க சபீர் அலிக்கு நிதியுதவி செய்திருக்கலாம்.
ஸ்கேனரில் சிக்காமல் இருக்க, தங்கத்தை மலக்குடலில் தூள் வடிவில் மறைத்து வைக்க ஊழியர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். சபீர் அலி, அவரது ஊழியர்கள் ஏழு பேர் மற்றும் பயணி உட்பட ஒன்பது பேரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பின்னால் இருந்து செயல்படும் நபர்கள் யார் என்பது குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“