சென்னை விமான நிலையத்தில் பரிசோதனைக்காக இனி நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை…

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் பயணிகள் இனி பாதுகாப்பு சோதனைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில், இந்திய விமானநிலைய ஆணையம் பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்யும் ஸ்கேனரை தானியங்கி முறையில் மாற்றி துரிதப்படுத்தியுள்ளது.

By: Updated: December 13, 2019, 08:00:45 PM

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் பயணிகள் இனி பாதுகாப்பு சோதனைக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில், இந்திய விமானநிலைய ஆணையம் பயணிகளின் உடைமைகளை பரிசோதனை செய்யும் ஸ்கேனரை தானியங்கி முறையில் மாற்றி துரிதப்படுத்தியுள்ளது.

குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது…

சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தில் பயணிகள் பாதுகாப்பு சோதனையின்போது நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலையை தவிர்க்கும் வகையில், பாதுகாப்பு சோதனையில் இரண்டு பேக்கேஜ் ஸ்கேனர்களில் தானியங்கி அமைப்பு முறை நிறுவப்பட்டுள்ளது. தற்போது ஒன்று மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்குள் மேலும் 6 ஸ்கேனர்கள் அமைக்கப்பட உள்ளது.

சென்னை விமான நிலையத்தில், பெரும்பாலும், மக்கள் தங்கள் பைகள், உடைமைகளை ஸ்கேன் செய்ய காத்திருக்க வேண்டியிருந்தது. அவர்களின் மின்னணு சாதனங்கள் மற்றும் பணப்பைகள் வைக்கப்பட்டிருந்த உடமைகளை ஸ்கேனிங் இயந்திரத்தை நோக்கி ஒரு கன்வேயர் வழியாக மனிதசக்தி மூலம் தள்ளப்பட வேண்டும். இதனால், பாதுகாப்பு சோதனை நடவடிக்கை தாமதமானது. பயணிகள் அதிகமாக வரும் நேரேரங்களில் குறிப்பாக காலையில் அதிக நெரிசலை ஏற்படுத்தியது.

தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தானியங்கி ஸ்கேன் செய்யும் புதிய வசதி மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எஃப்) ஒரு மணி நேரத்தில் 800 முதல் 900 பைகளை ஸ்கேன் செய்ய உதவியாக இருக்கும். இதற்கு முன்பு, தானியங்கி இல்லாத ஸ்கேனர் முறையில் ஒரு மணி நேரத்துக்கு 400 பைகள் மட்டுமே சோதனை செய்ய முடியும்.

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் நெரிசல் அதிகமாக இருப்பதால் உள்நாட்டு முனையம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இங்குள்ள பல பயணிகள் கேபின் சாமான்களுடன் பயணிக்கிறார்கள் என்றும் சர்வதேச முனையத்தைப் போலல்லாமல், பெரும்பாலான பைகள் சோதனை செய்யப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai airport domestic terminal security check gets faster by automatic tray retrieval system

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X