சென்னை விமான நிலையத்தில் தொடர் மழை காரணமாக 35 விமான சேவைகள் தாமதமாகியுள்ளது. 17 வருகை விமானங்கள், 18 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 35 விமானங்கள் தாமதமாகியுள்ளன.
மேலும், சென்னை விமான நிலையப் பகுதிகளிலும் கனமழை பெய்தது. விடிய விடிய மின்னல் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால், இன்றும் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து 2 ஆவது நாளாக இன்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்ப வேண்டிய 18 விமானங்கள் மற்றும் சென்னை விமான நிலையத்திற்கு வர இருந்த 17 விமானங்கள் என மொத்தம் 35 விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, மதுரை, திருச்சி, கோழிக்கோடு, கோவா, ஐதராபாத் ஆகிய நகரங்களில் இருந்த வந்த விமானங்கள் தரையிறங்க முடியவில்லை. இதனால் விமான பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இருப்பினும் இன்று மாலைக்குள் சென்னையில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“