வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதேபோல சென்னை விமான நிலைய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
சென்னை விமான நிலைய பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் சிறிது நேரம் வானில் வட்டமடித்து பின் தரையிறங்கின.
சென்னையில் வந்து தரையிறங்கும் விமானங்கள் 20 நிமிடங்கள் வரை தாமதமாக தரையிறங்கின. மேலும் மேலும் சென்னையில் இருந்து புறப்படும் 15 உள்நாட்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
சார்ஜா, துபாய், அபுதாபி, இலங்கை, சிங்கப்பூருக்கு செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. மேலும் டெல்லி, மும்பை, திருச்சி, கோவை, கொச்சி புறப்படும் விமானங்களும் தாமதமாக சென்றன.
சென்னைக்கு வரும் அனைத்து விமானங்களும் மோசமான வானிலை காரணமாக வானில் வட்டமடித்து சற்று நேரம் கழித்து தரையிறங்கின. சென்னை வரும் விமானங்கள் 10 நிமிடங்களில் இருந்து 20 நிமிடங்கள் வரை தாமதமாக தரையிறங்கின.
சென்னையில் இருந்து கொச்சிக்கு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் சென்னைக்கே திருப்பி விடப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“