சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்தில், 4 கண்காணிப்பாளர்கள், 16 ஆய்வாளர்கள் என மொத்தம் 20 சுங்க அதிகாரிகள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் தங்கம், செல்போன்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்கள் என மொத்தம் ரூ.14 கோடி மதிப்புள்ள பொருட்களை வருவாய் நுண்ணறிவு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ) தலைமையிலான நடவடிக்கையில் 113 விமானப் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, 20 சுங்க அதிகாரிகள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் வெளியான அறிக்கைகள் இது டி.ஆர்.ஐ மற்றும் சுங்கப் பிரிவும் சேர்ந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கை என்று கூறப்பட்டது. இருப்பினும், வட்டாரங்கள், டி.ஆர்.ஐ சோதனை செய்து, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் 113 பயணிகளை சுங்கத் துறைக்கு ஒப்படைப்பதற்கு முன்பு வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.
அந்த விமானத்தில் பயணித்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் ஈடுபட்டுள்ள ஏஜென்சிகளின் பணியாளர்களின் ஈடுபாடு குறித்து சந்தேகம் எழுப்பினர்.
இத்தகைய பெரிய அளவிலான கடத்தல் குறித்து கண்காணிக்கத் தவறியதாலா அல்லது கடத்தல் முயற்சியில் சுங்க அதிகாரிகளின் ஈடுபாடு காரணத்தாலா 20 சுங்க அதிகாரிகள் சர்வதேச முனையத்தில் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அதே நேரத்தில், அதிகாரிகளின் இடமாற்றத்திற்கான காரணம் ரகசியமானது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“