ஒரு மணிநேரத்தில் 40 விமானங்களை கையாளும் திறன் - மேம்பாடு அடைகிறது சென்னை விமான நிலையம்
Chennai airport gets new taxiways : சென்னை விமான நிலையத்தில் போயிங் 747 போன்ற பெரிய விமானங்களை எளிதில் கையாளும் வகையில் அதன் திறன், கட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai airport gets new taxiways : சென்னை விமான நிலையத்தில் போயிங் 747 போன்ற பெரிய விமானங்களை எளிதில் கையாளும் வகையில் அதன் திறன், கட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் போயிங் 747 போன்ற பெரிய விமானங்களை எளிதில் கையாளும் வகையில் அதன் திறன், கட்டமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
இதுதொடர்பாக, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அதிகாரி கூறியதாவது, விமான போக்குவரத்தை தற்போது பெரும்பாலானோர் விரும்பத்துவங்கியுள்ளனர். இதன்காரணமாக, சென்னை மட்டுமல்லாது இந்தியாவின் பல நகரங்களிலும் விமான சேவை மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, சென்னை விமான நிலையத்தில் அதிக விமானங்களை கையாளும் வகையிலும், போயிங் 747 போன்ற பெரிய விமானங்களை கையாளும் வகையில், இரண்டு புதிய டாக்ஸி வே அமைக்கும் பணிகளை ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த பணிகள், இரண்டாம் கட்ட விமானநிலைய விரிவாக்க திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது.
சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...
Advertisment
Advertisements
விமான நிலையத்தின் அமைக்கப்பட்டு வரும் இரண்டு புதிய டாக்ஸி வே பணிகள் கிட்டத்ட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளன. முதல் டாக்ஸிவே, மெயின் மற்றும் இரண்டாவது ரன்வேக்களை இணைக்கும் வகையிலும், இரண்டாவது டாக்ஸி வேயும் மெயின் ரன்வேயை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய டாக்ஸி வேக்களினால், அதிகளவில் விமானங்களை கையாள முடியும் என்பதால், அதற்கேற்ப விமான நிறுத்த இடங்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. போயிங் 747 போன்ற பெரிய விமானங்களை, சென்னை விமான நிலையத்தில் அதிகளவில் கையாள இந்த புதிய டாக்ஸி வேக்கள் பெருமளவில் துணைபுரியும்.
இந்த புதிய டாக்ஸி வேக்களின் மூலம், விமானங்களின் டேக் ஆப் நேரம், 10 நிமிடங்கள் அளவில் குறையும்.
விமான நிலைய இரண்டாம் கட்ட விரிவாக்க திட்டம் நிறைவடையும் பட்சத்தில், ஒருமணிநேரத்தில் 40 விமானங்கள் வரை கையாள முடியும். அதேபோல், இரவுநேரங்களில் அதிக விமானங்களை இங்கே நிறுத்திவைக்க வழி ஏற்படும். ஓர் ஆண்டில் 35 மில்லியன் வரையிலான பயணிகள், விமான சேவைகளை பெற வழிவகை ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil