சென்னை விமான நிலைய முனையத்தில் இருந்து மெட்ரோ ரயில் நிலையம் செல்வதற்கு பிரேத்யேக இலவச மின்கல ஊர்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் விம்கோ நகர் - விமான நிலையம் வரையிலான வழித்தடம், சென்ட்ரல் - பரங்கிமலை வரையிலான வழித்தடம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர்.
இதேபோல் சென்னை விமானநிலையம் தினமும் லட்சக்கணக்கான பயணிகளை கையாண்டு வருகிறது.
இந்நிலையில் பயணிகள் வசதிக்காக சென்னை விமான நிலைய முனையத்திலிருந்து, விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் செல்வோருக்காக இலவச மின்கல ஊர்தி சேவையை, சென்னை சர்வதேச விமான நிலையம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த சேவை காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும்.
சென்னை விமான நிலையத்தின் இந்த அறிவிப்பு விமான பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“