நீக்கப்பட்ட அண்ணா, காமராஜர் பெயர்கள்.. அரசியல் தலைவர்கள் கண்டனம் முதல் கவன ஈர்ப்பு நோட்டீஸ் வரை!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரத்தக் குரல் எழுப்ப வேண்டும்

chennai airport name changed mp ravikumar
chennai airport name changed mp ravikumar

chennai airport name changed mp ravikumar : சென்னை விமான நிலையத்துக்கு வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரவிக்குமார் எம்.பி நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.

சென்னையில் முக்கியமான சில இடங்களில் தமிழக பெருந்தலைவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு வேறு சில பெயர்கல் எழுதப்படுவது தொடர்கதையாக நிகழந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பதிவுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் சென்னை விமான முனையங்களில் இடம்பெற்ற அண்ணா மற்றும் காமராசர் பெயர் நீக்கப்பட்டன.

இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தனது கருத்தை பதிவு செய்திருந்தார். அவர் கூறியதாவது, “முதலமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று, சென்னை பன்னாட்டு விமான முனையத்திற்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமான முனையத்திற்குக் காமராசர் பெயரும் சூட்டப்பட்டன. ஆனால் இப்போது மத்திய பா.ஜ.க. ஆட்சியில் இருபெரும் தலைவர்களின் பெயர்களும் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உடனடியாக ஏற்கெனவே இருந்து வந்த அரும்பெரும் தலைவர்கள் அண்ணா, காமராசர் பெயர்கள் இடம்பெறவேண்டும்.
இதுகுறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரத்தக் குரல் எழுப்ப வேண்டும் “ என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்துக்கு வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் பெயர்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரவிக்குமார் எம்.பி நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai airport name changed mp ravikumar attention notice tamil news

Next Story
News Highlights: 6 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பு இப்போது இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com