விமான பயணிகளின் எண்ணிக்கையில், சென்னை விமான நிலையம் சரிவை சந்திந்து வருகிறது. மூன்றாம் இடத்திலிருந்து ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை விமான நிலையம் நாட்டின் மூன்றாவது பரபரப்பான விமான நிலையமாக இருந்தது. அதாவது அதிக அளவிலான பயணிகள் வந்து செல்லுதல். பின்னர் அது நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது, இப்போது சென்னை விமான நிலையம் ஒட்டுமொத்த பயணிகள் போக்குவரத்தில் ஆறாவது இடத்தில் உள்ளது. இதில் முதல் 5 இடங்களில் டெல்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய விமான நிலையங்கள் உள்ளன.
அதேநேரம் சர்வதேச விமான பயணிகளின் எண்ணிக்கையும் சென்னையில் கணிசமாக குறைந்து வருகிறது. அதிக எண்ணிக்கையிலான சர்வதேச பயணிகளைக் கையாள்வதில் சென்னையை விட கொச்சி விமான நிலையம் முன்னேறியுள்ளது.
இரண்டம் கட்ட ஊரடங்கிற்குப் பிறகு, சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில், ஒட்டுமொத்த பயணிகள் போக்குவரத்தில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் மற்ற மெட்ரோ நகர விமான நிலையங்களை விட பின் தங்கிய நிலையிலே உள்ளது.
சர்வதேச விமானங்களுக்கான வந்தே பாரத் திட்டத்தில் கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட இடங்களுக்கான விமான இயக்கத்தின் கட்டுப்பாடுகள், உள்ளிட்ட பல காரணங்கள் பயணிகள் குறைவுக்கு வழிவகுத்ததாக இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கடந்த ஆண்டு, பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு உள்நாட்டுத் துறையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விமானங்களை மட்டுமே மாநில அரசு அனுமதித்தது. இப்போது தளர்வுகள் அதிகரிக்கப்பட்டு நிலையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்ககூடும். கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்து வருவது நல்ல முன்னேற்றமாகும். அதனால், இப்போது, எங்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை, போக்குவரத்து மெதுவாக அதிகரித்து வருகிறது. ஆனால், இன்னும் அதிகரிக்க சிறிது காலம் ஆகலாம் என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil