சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிளம்பாக்கம் வரை கட்டவிருக்கும் மெட்ரோ திட்டத்திற்கான பணிகளை தொடங்குவதற்கு சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆயத்தம் ஆகிறது.
மெட்ரோ கட்டுமானத்திற்காக நிலம் ஒதுக்குவதற்கு மற்றும் பயன்பாட்டு வழித்தடங்களை மாற்றுவதற்கு நிதி கோரி தமிழக அரசுக்கு CMRL கடிதம் எழுதியுள்ளது. “செயல்முறையைத் தொடங்குவதற்கு மாநில அரசிடம் ₹800 கோடி கேட்டுள்ளோம். விரைவில், திட்டத்திற்கான நிதியையும் கோருவோம், ”என்று CMRL அதிகாரி கூறியுள்ளார்.
15.3 கிலோமீட்டர் நீளத்திற்கு, சென்னை விமான நிலையத்தில் இருந்து, கிளம்பாக்கம் வரை, பல்லாவரம், கோதண்டம் நகர், குரோம்பேட்டை, மகாலட்சுமி காலனி, திரு.வி.க.நகர், தாம்பரம், இரும்புலியூர், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஆகிய ரயில் நிலையங்கள் இந்த திட்டம் உள்ளடக்குகிறது.
இந்த திட்டத்தை செயல்படுத்த சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (சியுஎம்டிஏ) கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டு, செயல்பாட்டிற்கு வந்த பிறகு, மெட்ரோ ரயில் சேவையின் தேவை கட்டாயமாகும் என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil