Michaung Cyclone: கோவையில் இருந்து செல்லும் அனைத்து விமானங்களும் நாளை காலை 9 மணி வரை ரத்து செய்யப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், மிக்ஜாம் எதிரொலியால் சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கோவையில் இருந்து சென்னை செல்லும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக மாறியது. இது சென்னையிலிருந்து 310 கி.மீ திசையில் நிலைகொண்டது.
இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வட தமிழகத்தை நோக்கி நகரும்.
வரும் 5ம் தேதி முற்பகலில் நெல்லூர்- மசுலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும்.
புயல் காரணமாக சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுன்னது. நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை மழை காரணமாக கணேசபுரம், கெங்கு ரெட்டி, செம்பியம், வில்லிவாக்கம், துரைசாமி, மேட்லி, ரங்கராஜபுரம், மவுண்ட், சைதாப்பேட்டை, பழவந்தாங்கல், சிபி சாலை, வியாசர்பாடி, திருவொற்றியூர், ஆர்பிஐ சுரங்கபாதை, கோயம்பேடு, சேத்துப்பட்டு, சூளைமேடு சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதுவரை 37 இடங்களில் முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“