chennai | bangalore | மத்திய அரசு பெங்களூரு-மங்களூர் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே மற்றும் பெங்களூரு வழியாக மங்களூரு-சென்னை விரைவுச்சாலையை தொடங்கியுள்ளது.
2024 ஜனவரியில் புதிய கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலை திறப்பு விழாவுக்குப் பிறகு பெங்களூரு-சென்னை இடையேயான பயண நேரம் இரண்டு மணி நேரமாக குறைக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் இரு நகரங்களுக்கு இடையே பயண நேரம் 2 மணி நேரமாக குறையும்” என்றார். மேலும், நீங்கள் சொகுசு பேருந்துகள் மற்றும் மின்சார ஸ்லீப்பர் கோச் பேருந்துகளை தொடங்கலாம் என்றார்.
மேலும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்த, மாற்று எரிபொருள் விருப்பங்களை நாம் பின்பற்றுவது முக்கியம். சமீபத்தில், சோதனை அடிப்படையில், 15% மெத்தனால் கலவையால் இயக்கப்படும் அசோக் லேலண்ட் பேருந்துகளை பெங்களூரில் செயல்படுத்தினோம். தரம் குறைந்த நிலக்கரியில் இருந்து மெத்தனால் தயாரிக்கலாம். நாட்டில் மெத்தனால் லாரிகள் மற்றும் பேருந்துகள் தொடங்க வேண்டும் என்பது எனது கனவு. இதன் மூலம் டீசல் இறக்குமதியை நம்பியிருப்பதை குறைக்க முடியும்” என்றார்.
இந்த நிலையில் சென்னை-பெங்களூரு விரைவு சாலையின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகின்றன.
இதில் 23 கிலோ மீட்டருக்கு பறக்கும் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“