தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை குண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 11 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், கடலூர், ராமேஸ்வரம், பாம்பன், தூத்துக்குடி, காட்டுப்பள்ளி மற்றும் குளச்சல் துறைமுகங்களில் தொலைதூர புயலை முன்னறிவிப்புச் செய்வதற்கான ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா அருகே நேற்று மையம் கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று வலு பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து இன்று மாலை அல்லது இரவுக்குள் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா அருகே கரை கடக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் தூர புயல் முன்னறிவிப்பு கொடி எண் 1 இன்று ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் பெரிய வானிலை இருக்காது என்ற போதிலும் கடல் சற்று சீற்றத்துடனும், காற்று சற்று வேகத்துடனும் இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது எண் 1 ஏற்றப்பட்டுள்ளது.