மத்திய அரசின் பணமாக்கல் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட தமிழ்நாட்டின் 6 விமான நிலையங்கள்

தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை உள்பட 6 விமான நிலையங்கள், 491 கி.மீ தேசிய நெடுஞ்சாலை, நீலகிரி மலை ரயில் ஆகியவை உள்கட்டமைப்பு சொத்துக்களாக மத்திய அரசால் திங்கள்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது .

Chennai and six airports identified the Centre monetisation plan, chennai, சென்னை விமான நிலையம், தேசிய பணமாக்கல் திட்டம், தமிழ்நாடு, தமிழ்நாட்டில் 6 விமான நிலையங்கள், National monetisation pipeline, tamilnadu, india, chennai, madurai, coimbatore

தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை உள்பட 6 விமான நிலையங்கள், 491 கி.மீ தேசிய நெடுஞ்சாலை, நீலகிரி மலை ரயில் ஆகியவை உள்கட்டமைப்பு சொத்துக்களாக மத்திய அரசால் திங்கள்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது .

தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகளை மத்திய நிதியமைச்சர் மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் டெல்ல்யில் ஆகஸ்ட் 23ம் தேதி தொடங்கி வைத்தார்.

தேசிய பணமாக்கல் ஆதார வழிமுறைகளில் (The National Monetisation Pipeline (NMP), மத்திய அரசின் உள்கட்டமைப்பு சொத்துக்களின், நான்கு ஆண்டு ஆதார வழிமுறைகள் அடங்கியுள்ளன. இது முதலீட்டாளர்களுக்கு தொலைநோக்கை அளிப்பதோடு, சொத்துக்களை பணமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு, இடைக்கால திட்டமாகவும் செயல்படும்.

உள்கட்டமைப்பு மற்றும் முக்கிய அறிவிப்புகளுக்கு புதுமையான மற்றும் மாற்று முறையில் நிதி திரட்ட, சொத்துக்களை பணமாக்குவது பற்றி மத்திய அரசின் 2021-22ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை வலியுறுத்துகிறது.

அதன்படி, தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை உள்பட 6 விமான நிலையங்கள், 491 கி.மீ தேசிய நெடுஞ்சாலை, நீலகிரி மலை ரயில் ஆகியவை உள்கட்டமைப்பு சொத்துக்களாக மத்திய அரசால் திங்கள்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது .

என்.எல்.சி இந்தியாவின் சூரிய மின்சக்தி திறன், காவிரிப் படுகையில் எரிவாயு குழாய்கள், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தின் சில துறைமுக சொத்துக்கள், புதுச்சேரி மற்றும் சென்னை ரயில் நிலையங்கள், புதுச்சேரியில் உள்ள அசோக் ஹோட்டல் ஆகியவற்றின் செயல்திறனை மேம்படுத்துவதோடு அவற்றை கூட்டு குத்தகைக்கு விட்டு மத்திய அரசு பணமாக்க முயற்சிக்கிறது.

திருச்சி விமான நிலையம் 2022 நிதி ஆண்டில் உள்கட்டமைப்பு வாங்கும் திறன் சமநிலை (PPP) மாதிரிகள் மூலம் பணமாக்குதலுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 2023 நிதி ஆண்டில் மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களும், 2024 நிதி ஆண்டில் சென்னை விமான நிலையமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சொத்து பணமாக்கல் ஆதார வழிமுறைகள் உள்கட்டமைப்பு சொத்துக்களைப் பற்றி பேசுகிறது. இது அவசியம் நன்றாக பணம்மாக்கப்பட வேண்டும். இருப்பினும், இந்த சொத்துகளின் உரிமை அரசாங்கத்திடமே இருக்கிறது.

அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அதை திருப்பித் தர வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.

“சலுகை வழங்குவது என்பது ஒரு இறுக்கமான வடிவம் ஆகும். இது சலுகைதாரரை சொத்துக்களை வரையறுக்கப்பட்ட ஆபத்து மற்றும் செயல்திறன் கடமைகளுடன் கட்டமைக்க / புதுப்பிக்க செயல்பட எந்த இடமாற்றமும் இல்லாமல் அனுமதிக்கும்” என்று ஜே.சாகர் அசோசியேட்ஸின் இணை மேலாண்மை பங்குதாரர் அமித் கபூர் கூறினார்.

நிதியாண்டு 2022-2025-ல் தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் உளுந்தூர்பேட்டை – பாடாலூர் (94 கிமீ), உளுந்தூர்பேட்டை – திண்டிவனம் (73 கிமீ), திருச்சி – பாடலூர் (38 கிமீ), கிருஷ்ணகிரி – தோப்பூர்காடு (63), ஓசூர் ஆறு வழிச்சாலை – கிருஷ்ணகிரி (60 கிமீ), தாம்பரம் – திண்டிவனம் (46.5) மற்றும் திருச்சி – காரைக்குடி உட்பட திருச்சி பைபாஸ் (117 கிமீ) அடையாளம் காணப்பட்ட்டுள்ளன.

பாரம்பரிய நீலகிரி மலை ரயிலின் உள்கட்டமைப்புக்கும் புதுபிப்பதற்கும் பெரிய அளவில் முதலீடு தேவைப்படலாம் என்பதால் பணமாக்கப்படலாம். ரயில்வே நிலத்தில் உள்ள ரயில் நிலையம் மற்றும் அதனுடன் இணைந்த ரியல் எஸ்டேட்டுக்கும் ரயில் செயல்பாடுகளுடன் சேர்த்து, நம்பகத்தன்மையையும் வணிக கவர்ச்சியையும் கொண்டு வரலாம். இந்த பரிவர்த்தனைகளில் சில தயார் நிலையில் உள்ளன. எனவே, பணமாக்குதலுக்கான கட்டமைப்புகள் மற்றும் முறைகள் இயல்பாக சுட்டிக்காட்டப்படுகின்றன. மேலும், விரிவான பரிவர்த்தனை காரணமாக விடாமுயற்சியின் அடிப்படையில் உருவாகலாம்” என்று நிதி ஆயோக்கின் ஆவணம் கூறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai and six airports identified under centre monetisation plan in tamilnadu

Next Story
Tamil News Highlights : தமிழகத்தில் இன்று 1,573 பேருக்கு கொரோனா தொற்று; 27 பேர் உயிரிழப்புChennai corona virus, daily reports
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com