சென்னை மேற்கு தாம்பரம் வஉசி தெருவில் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் உதவி ஆய்வாளராக பொன்னி வளவன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கிழக்கு தாம்பரம் பகுதியில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வருபவர் ராஜா ரமேஷ், அவரது டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்கு சோதனை செய்வதற்காக சென்ற உதவி ஆய்வாளர் பொன்னி வளவன், "எங்களுக்கு மாதம் மாதம் பணம் தர வேண்டு.ம நீங்கள் நேரடியாக அலுவலகத்துக்கு வாருங்கள் பேசிக் கொள்ளலாம்", என கூறியுள்ளார்.
அலுவலகத்திற்கு வந்த ராஜா ரமேஷிடம் பொன்னிவளவன் மாதம் 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கூறியதற்கு மறுப்பு தெரிவித்ததால், கடையில் விதிமீறல்கள் இருப்பதாக நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
இதனால், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ராஜா ரமேஷ் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளார். பொன்னிவளவன் அலுவலகத்தில் இருந்த பொழுது ராஜா ரமேஷிடம் சற்று முன் பத்தாயிரம் பணம் வாங்க முயற்சி செய்தபோது, சென்னை நகர சிறப்பு பிரிவு லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் மாலா தலைமையில் அங்கு வந்து அவரை கைது செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil