இப்படியெல்லாம் கூடவா கொள்ளயடிப்பார்கள்? சென்னை ஏடிஎம்மில் பொருத்தப்பட்ட ஸ்கிம்மர் கருவியால் பரபரப்பு.

இந்த குற்றச்செயலில் வடநாட்டு கொள்ளை கும்பல் ஈடுப்பட்டிருக்கலாம்

By: Updated: July 18, 2019, 01:09:18 PM

chennai sbi atm : சென்னையில் வாடிக்கையாளர்களின் தகவலை திருடி பணத்தை கொள்ளையடிப்பதற்காக ஏடிஎம்மில் கொள்ளையர்கள் ஸ்கிம்மர் கருவி பொருத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இரவு நேரங்களில் நடைபெறும் ஏடிஎம் கொள்ளைகளை தடுத்திட காவல் துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதும், கொள்ளையர்கள் நூதன முறையில் இதுப்போன்ற செயல்களில் ஈடுபடுவது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நேற்றைய தினம், சென்னை அயனாவரத்தில் உள்ள பிரபல பொதுத்துறை வங்கியின் ஏடிஎம்மில் இரவு 10 மணியளவில் வாடிக்கையாளர் ஒருவர் பணத்தை எடுக்க சென்றார். அவர், ஏ.டி.எம். இயந்திரத்தில் ‘டெபிட் கார்டை’ சொருகிடபோது, அதில், ஸ்கிம்மர் கருவி மற்றும் மைக்ரோ காமிரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அந்த வாடிக்கையாளர் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்து வருவதால், அவரால் ஸ்கிம்மர் கருவியை எளிதாக கண்டுப்பிடிக்க முடிந்துள்ளது. உடனடியாக இதுகுறித்து அந்த நபர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். வங்கி அதிகாரிகளும் ஏடிஎம் மையத்திற்கு வரவழைக்கப்பட்டு ஸ்கிம்மர் கருவியையும், ரகசிய கேமராவையும் கைப்பற்றினர்.

கடந்த ஒரு மாதமாக ஏடிஎம் மையத்தில் பதிவாகியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு கொள்ளையன் குறித்த விவரங்களை தேடி வருகின்றனர். ஏடிஎம் எந்திரத்தில் ஒன்றும், மையத்தில் ஒன்றுமாக உள்ள இரண்டு சிசிடிவி கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த காட்சிகளை வைத்து மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி திருடும் நபர்‌கள் குறித்த விவரங்கள் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் இருப்பதால், அவர்களும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஸ்கிம்மர் கருவியிலும், ரகசிய கேமராவிலும் இதுவரை பதிவான வடிக்கையாளர்களின் விவரங்களை அறிய அவற்றை போலீசார் தொழில்நுட்ப ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.நூதன முறையில் இப்படி கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட முயன்ற கொள்ளையர்கலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், இந்த குற்றச்செயலில் வடநாட்டு கொள்ளை கும்பல் ஈடுப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Chennai atm sbi atm chennai sbi atm

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X