/indian-express-tamil/media/media_files/9UhBj6WXRuKw2FDxbM8A.jpg)
சென்னை, ஆவடியில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை மீட்பு
சென்னையை அடுத்த ஆவடியில் அடுக்குமாடி குடியிருப்பின் 4 ஆவது மாடியில் இருந்து விழுந்து மேற்கூரையில் சிக்கிய குழந்தையை மீட்ட குடியிருப்புவாசிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சென்னையை அடுத்த ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் தனியாருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வெங்கடேஷ் -ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஹைரின் என்ற 7 மாத குழந்தை உள்ளது.
இந்தநிலையில் அடுக்குமாடி குடியிருப்பின் 4 ஆவது மாடி பால்கனியில் விழுந்த குழந்தை ஹைரின், 2 ஆவது மாடி தகர ஷீட்டில் குழந்தை ஹைரின் தவறி விழுந்தது. குழந்தை தகர சீட்டின் விளிம்பில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழலாம் என்ற நிலையில், ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டு இருந்தது. இதைப்பார்த்த அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், துரிதமாக குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
உடனடியாக அங்கு திரண்ட குடியிருப்பு வாசிகள், குழந்தை கீழே விழுவதைத் தவிர்க்கும் வகையில், பெரிய பெட்ஷீட்டை விரித்து பிடித்தபடி காத்திருந்தனர். மறுபுறம், சிலர் குழந்தை இருந்த தளத்தின் கீழே உள்ளே வீட்டின் பால்கனி வழியாக மேலே ஏறிச் சென்று, உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டனர்.
இந்த மீட்புப் பணியின்போது, குழந்தையின் கை மற்றும் கால் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. குழந்தையை உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், உயிரைப் பணயம் வைத்து குழந்தையை மீட்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட குடியிருப்புவாசிகளுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
Today morning in my cousins apartment in Chennai 😱 pic.twitter.com/VAqwd0bm4d
— 🖤RenMr♥️ (கலைஞரின் உடன்பிறப்பு) (@RengarajMr) April 28, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.