கொரோனா எதிரொலி; சென்னை – பெங்களூரு ரயில் சேவை நிறுத்தம்

பயணிகளின் வரத்து குறைவால் சென்னை பெங்களுர் இடையே செல்லும் சதாப்தி ஸ்பெஷல் விரைவு ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பெரும்பாண்மையான மக்கள் தொற்று ஏற்படுவதிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மக்களின் நகர்வை கட்டுப்படுத்தும் விதமாகவும் பல தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கையாண்டு வருகின்றன.

கொரோனா அச்சம் மற்றும் கட்டுப்பாடுகளின் எதிரொலியாக, பயணிகளின் வரத்து குறைவால் சென்னை பெங்களுர் இடையே செல்லும் சதாப்தி ஸ்பெஷல் விரைவு ரயில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

வண்டி எண் 02028 கே.எஸ்.ஆர் பெங்களூரு – சென்னை மத்திய சதாப்தி சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை தவிர, காலை 6 மணிக்கு பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புறப்படும். பயணிகள் வரத்து குறைவுக் காரணமாக நேற்று முதல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்மேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதேபோல், வண்டி எண் 02027 சென்னை சென்ட்ரல் – கே.எஸ்.ஆர் பெங்களூரு சதாப்தி ஸ்பெஷல் சென்னை சென்ட்ரலில் இருந்து செவ்வாய் கிழமைகளைத் தவிர அனைத்து நாட்களிலும் மாலை 5.30 மணிக்கு புறப்படுவது வழக்கம். தென்மேற்கு ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பை தொடர்ந்து, புதன்கிழமை முதல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai bangalore shatabdi express cancelled due to poor patronage south western railway announced

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com