Night Electric Train Between Chennai Beach and Tambaram: சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து இன்று (செப்.23) இரவு 8.25, 8.55, 10.20 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயிலும், திருவள்ளூரில் இருந்து சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை கடற்கரை வரும் ரயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து நாளை அதிகாலை 4.05 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
அதே போல, சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில் பகுதிநேரமாக சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 10.10, 10.40, 11.15 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் பகுதிநேரமாக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து இரவு 9.10, 10.10, 11 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் பகுதிநேரமாக எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் பகுதிநேரமாக எழும்பூர்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து நாளை அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில், பகுதிநேரமாக சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“