Advertisment

சென்னை கடற்கரை- திருவண்ணாமலை இடையே கழிவறை வசதியுடன் கூடிய மின்சார ரயில் விரைவில் இயக்கம்?

சென்னை கடற்கரை- திருவண்ணாமலை இடையே 6 மணி நேரம் பயணம் என்பதால், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
chennai, chennai suburban train, maintenance works, southern railway, railway line upgradation, suburban train time changes, chennai train, chengalpattu, chennai beach

Chennai Beach Tiruvannamalai MEMU Passenger train

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை கடற்கரை- திருவண்ணாமலை இடையே கழிவறை வசதியுடன் கூடிய மின்சார ரயில் விரைவில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

19 ஆண்டுகளுக்கு பிறகு மே 2 முதல், சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலை வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்கு இரவு 12.05 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு காலை 9.50-க்கு சென்னை வந்தடையும்.

மொத்தம் 12 பெட்டிகள் கொண்ட இந்த மின்சார ரயிலில் சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்ல கட்டணம் ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

பொதுவாக மின்சார ரயிலில் கழிவறை வசதிகள் இருக்காது.    

இருப்பினும் சென்னை கடற்கரை- திருவண்ணாமலை இடையே 6 மணி நேரம் பயணம் என்பதால், இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

எனவே, இந்த ரயிலில் கழிவறை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர், தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், 'சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் மின்சார ரயில்கள், கழிவறை வசதி இல்லாத ரயில் பெட்டிகள் ஐ.சி.எப். மூலம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு பெட்டியிலும் கழிவறை வசதி ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், கழிவறையுடன் கூடிய மின்சார ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி பெரம்பூர் ஐ.சி.எப்.பில் விரைவில் தொடங்கப்பட உள்ளது. பெட்டிகள் முழுமை அடைந்தவுடன் கழிவறை வசதியுடன் கூடிய மின்சார ரயில்கள் விரைவில் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும்' என்று தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment