/indian-express-tamil/media/media_files/2024/11/20/Rr4pMzBpSbTq4g06hebk.jpg)
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அடுத்த மூன்று நாள்களுக்கு சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை நோக்கி வரும் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வேலைவாய்ப்பு, வணிகம், மருத்துவ உதவிகள் மற்றும் கல்வி என பல காரணங்களுக்காக தினசரி பெரும்பாலான மக்கள் சென்னைக்கு வருகை தருகின்றனர். அதன்படி, சென்னை புறநகர் ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது.
நாள்தோறும் ஏறத்தாழ 25 லட்ச பயணிகள் சென்னை புறநகர் ரயில் சேவையை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக அடிக்கடி ரயில் சேவை ரத்து செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. ஏற்கனவே, கடந்த 17ஆம் தேதி சென்னை கடற்கரை-தாம்பரம் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், மீண்டும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, "சென்னை எழும்பூர் - சிங்கப்பெருமாள் கோயில் - செங்கல்பட்டு இரயில்வே நிலையங்கள் இடையே இன்று (நவ 20) முதல் 23-ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, இந்த வழியாக இயக்கப்படும் ரயில்கள் நவ.20 முதல் நவ.23 வரை பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 4.10 வரை சென்னை கடற்கரை இரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் இரயில்கள் சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே இயக்கப்படும்" என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், பொதுமக்கள் தங்கள் பயணம் குறித்து திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், சிங்கப்பெருமாள் கோவில் முதல் செங்கல்பட்டு வரை புறநகர் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.