சென்னையில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்களால் ஏற்படும் நெகிழி கழிவுகளை இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை பதப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் ஒரு நாளைக்கு 5 டன் பிளாஸ்டிக் கழிவுகளை பதப்படுத்தும் திறன் கொண்ட ஒரு நடமாடும் எரியூட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு ஏப்ரலில் 2.1 கோடி செலவில் அமைக்கப்பட்டு, இதுவரை 852 டன் கழிவுகளை பதப்படுத்தியுள்ளது.
மணலியில் சிஎஸ்ஆர் நிதியில் ஒரு ஆலை அமைக்கப்பட்டு, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக இயந்திரங்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரையை சேர்ப்பது உதவிகரமாக இருக்கிறது என்று திடக்கழிவு மேலாண்மைத் துரையின் தலைமைப் பொறியாளர் கூறியுள்ளார்.
இந்த ஆலைகள் நெகிழிக் கழிவுகளை விரைவாக செயலாக்க உதவுகின்றன. வாரந்தோறும், தடை செய்யப்பட்ட நெகிழி உபயோகிக்கும் விற்பனையாளர்களுக்கு, ரூ.10,000 வரை அபராதம் விதித்தது சென்னை மாநகராட்சி. இதுவரை 100க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தியது.இந்த ஆலைகள் நெகிழிக் கழிவுகளை விரைவாக செயலாக்க உதவுகின்றன. வாரந்தோறும், தடை செய்யப்பட்ட நெகிழி உபயோகிக்கும் விற்பனையாளர்களுக்கு, ரூ.10,000 வரை அபராதம் விதித்தது சென்னை மாநகராட்சி. இதுவரை 100க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தியது.