Femina Miss India 2018: மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற நம்ம ஊரு ஸ்டைலிஷ் தமிழச்சி அனுக்ரீத்தி வாஸ்

Miss India 2018 Anukreethy Vas: மிஸ் இந்தியா அழகியாக தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான அனுக்ரீத்தி வாஸ் வெற்றிப்பெற்றுள்ளார்.

Femina Miss India 2018 winner Anukreethy Vas: மிஸ் இந்தியா அழகியாக தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியான அனுக்ரீத்தி வாஸ் வெற்றிப்பெற்றுள்ளார். இவரின் வெற்றியால் தமிழகத்தை சேர்ந்த அனைவரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டுக்கான ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் நடைபெற்றது.30 மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் இதில் பங்கேற்று பல்வேறு கட்டப் போட்டிகளில் தகுதி பெற்றனர். இதில் நேற்றிரவு நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில், கடந்த ஆண்டு மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்ட மானுஷி சில்லர், நடிகைகள் கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மாதுரி தீக்சித் உள்ளிடடோர் கலந்துகொண்டனர்.

Femina Miss India 2018 winner Anukreethy Vas: சென்னை பெண் அனுக்ரீத்தியும் மிஸ் இந்தியா 2018 போட்டியும்:

தமிழகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அனுக்ரீத்தி வாஸ். திருச்சியை சொந்த ஊராக கொண்ட இவர், அங்குள்ள ஆர்.எஸ்.கே மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளிப் படிப்பிற்கு பிறகு, சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்சு பட்டப்படிப்பில் பயின்று வருகிறார். சென்னையில் மாடலிங் செய்து வந்த இவர், இந்த ஆண்டின் மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றார். போட்டியின் முதல் ரவுண்டுக்காக 30 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், அனுக்ரீத்தி வாஸுவும் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் பல்வேறு சுற்றுகளில் கலந்துக்கொண்டு பட்டையை கிளப்பியவர் அனுக்ரீத்தி வாஸ்.

Miss India 2018 Anukreethy Vas: மிஸ் இந்தியா 2018 போட்டியில் அனுக்ரீத்தி வாஸ்

Miss India 2018 Anukreethy Vas: மிஸ் இந்தியா 2018 போட்டியில் அனுக்ரீத்தி வாஸ்

நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில், 5 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர். இதில் சென்னையை சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் மிஸ் இந்தியா பட்டத்தை தட்டிச் சென்றார்.

இவரின் இந்த வெற்றியால் தமிழக மக்கள் அனைவரும் பெருமையும் உற்சாகமும் அடைந்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close