vande-bharat-trian | southern-railway | tamil-nadu | karnataka | 8 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) இரவு 11 மணிக்குப் புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு SMVT பெங்களூருவை வந்தடையும்.
அதாவது இரண்டிற்கும் இடையிலான தூரத்தை 5.30 மணி நேரத்தில் கடக்கும். பின்னர், நவம்பர் 20 ஆம் தேதி, வந்தே பாரத் சிறப்பு ரயில் SMVT பெங்களூருவில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு அதே நாளில் இரவு 10 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
தற்போதுள்ள அனைத்து 34 வந்தே பாரத் ரயில்களும் பகலில் இயக்கப்படுகின்றன, அதே நேரத்தில் தெற்கு ரயில்வே (SR) இரவு நேர சேவையை இயக்குகிறது.
ஏற்கனவே, சென்னை, எழும்பூர் இடையே வந்தே பாரத் ரயில்களின் நான்கு சிறப்பு சேவைகளை தென்னக ரயில்வே வெற்றிகரமாக இயக்கியது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ““நாட்டின் வேறு எந்த ரயில்வே மண்டலமும் இதுவரை வந்தே பாரத் ரயில்களின் சிறப்பு சேவைகளை இயக்கவில்லை. சென்னை-திருநெல்வேலி சிறப்பு ரயில்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது” என்றார்.
பயணிகளின் விடுமுறை கூட்டத்தை குறைக்கும் வகையில், தமிழ்நாடு- கர்நாடகா தலைநகர்களுக்கு இடையே முதல் முறையாக தென்னக ரயில்வே வந்தே பாரத் அரை அதிவேக ரயிலை நவம்பர் 21-ஆம் தேதி இரவு இயக்க உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“