Chennai Billroth hospital : சென்னை பில்ராத் மருத்துவமனையின் கடைசி 4 மாடிகளை, கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்காக பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
சென்னையில் பில்ராத் மருத்துவமனை, சமீபத்தில் 8 மாடி கட்டடமாக உயர்த்தப்பட்டிருந்தது. 8 மாடி வரை கட்ட மருத்துவமனைக்கு அனுமதி தரப்படவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட மாடிகளை இடிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து பில்ராத் மருத்துவமனை நிர்வாகம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவின் விசாரணை, கடந்த ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து மறுவிசாரணையை, 2020, மே 27ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்பரன்சிங் முறையில் நீதிபதிகள் பாப்டே பொலானோ மற்றும் ரிஷிகேஷ் ராய் அடங்கிய பெஞ்ச், தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ளது. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் கட்டமைப்பு போதுமான அளவில் இல்லை.
இதனிடையே, பில்ராத் மருத்துவமனையில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட 4 முதல் 8 மாடிகளை, தமிழக அரசு, கொரோனா நோயாளிகளின் சிகிச்சை பயன்பாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என் கே பால் கூறியதாவது, உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், 150 படுக்கைகள் வரை அங்கு போட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டின் தமிழ்நாடு வகுத்த கட்டட விதிமுறை சட்டத்தின்படிதான் மருத்துவமனை 8 மாடிகளை கட்டியதாகவும், இதில் விதிமீறல்கள் ஏதும் இல்லை என அவர் வாதிட்டார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், கட்டட சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.