மதுரை ரயில் நிலையத்தில் சக்கரம் கழன்றதால் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னையில் இருந்து போடி நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், மதுரை ரயில் நிலையத்தை வியாழக்கிழமை காலை வந்தடைந்தபோது, என்ஜினுக்கு அடுத்தப் பெட்டியின் சக்கரம் கழன்றுள்ளது. இதனால், தண்டவாளத்தில் ரயிலின் பெட்டி தரம்புரண்ட நிலையில், உடனடியாக நிறுத்தப்பட்டது.
/indian-express-tamil/media/post_attachments/cf9ee622-0ac.jpg)
இதன்காரணமாக, தீபாவளியை முன்னிட்டு மதுரை வழித்தடத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே பணியாளர்கள் பழுதான ரயிலின் பெட்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
/indian-express-tamil/media/post_attachments/0fc8acbb-3e4.jpg)
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும், மாற்று ரயில் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டு, ஒன்றரை மணிநேரம் தாமதமாக பயணிகளை ரயில்வே ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“