சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ (YMCA) மைதானத்தில் வரும் 27ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும். விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பபாசி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 48-வது சென்னை புத்தகக் காட்சி டிசம்பர் 27-ம் தேதி தொடங்குகிறது. 48 ஆவது சென்னைப் புத்தகக்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் 27ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் தொடங்கி வைத்து ஜனவரி 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இத்துவக்க நிகழ்ச்சியில் துணை முதல்வர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் வழங்கி சிறப்பிக்க இருக்கிறார்கள்.
புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மொத்தம் 17 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறுகிறது.
மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10% கழிவு வழங்கப்படுகிறது. பபாசியில் உறுப்பினரல்லாதவர்கள் விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கும் அரங்குகள் ஒதுக்கப் பட்டுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2024/12/09/Yb66MrmnAPXLVDE78BSw.jpg)
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது.
தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்திய அகாதமி, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன், நேஷனல் புக் டிரஸ்ட், பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், மற்றும் தொல்லியல்துறை, ஆகிய நிறுவனங்களும் கலந்துகொள்கிறார்கள். இல்லம் தேடிக் கல்வி இயக்கம் பங்கெடுக்கின்றது.
/indian-express-tamil/media/media_files/2024/12/09/SxgohEzP6e9fpBM7xZut.jpg)
உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களான PENGUIN RANDOM HOUSE INDIA, AMERICAN CONSULATE, BRITISH COUNCIL, HARPERCOLLINS PUBLISHERS INDIA, SIMON மற்றும் SCHUSTER INDIA ஆகிய நிறுவனங்களும் கலந்து கொள்கின்றது.
ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் நடைபெற உள்ளது. நிறைவுநாள் நிகழ்வில் நீதிபதி ஆர். மகாதேவன் (உச்சநீதிமன்ற நீதிபதி) விழா நிறைவுரை நிகழ்த்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புத்தகக் கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைக்கும் நிலையில்,
த.வெ.க தலைவர் விஜய்-க்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“