Advertisment

பத்திரிகையாளர் வி.அன்பழகன் கைது: மு.க.ஸ்டாலின், டிடிவி.தினகரன் கண்டனம்

V Anbazhagan Arrested: ஊழல்களை மறுக்க திராணியில்லாமல் பத்திரிகையாளரை கைதுச் செய்திருப்பது கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்.- எம் எச் ஜவாஹிருல்லா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
V Anbazhagan arrested, Makkal seithi maiyam, V Anbazhagan arrested Chennai Book Fair, வி அன்பழகன், வி அன்பழகன் கைது, பத்திரிகையாளர்

V Anbazhagan arrested, Makkal seithi maiyam, V Anbazhagan arrested Chennai Book Fair, வி அன்பழகன், வி அன்பழகன் கைது, பத்திரிகையாளர்

Chennai Book Fair Issue, Journalist V Anbazhagan Arrested: சென்னை புத்தக கண்காட்சி பிரச்னையில் பத்திரிகையாளர் வி.அன்பழகன் கைதுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இது கருத்து சுதந்திரத்தை நசுக்கு செயல் என அரசை குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

Advertisment

கோயம்பேடு திணறுகிறது: பொங்கல் பண்டிகையின் போது நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள்..

சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர்

பாரதிதமிழன் விடுத்த அறிக்கை வருமாறு: ‘மூத்த பத்திரிகையாளரும் , நமது மன்றத்தின் பொருளாளாருமான வி.அன்பழகன் மக்கள் செய்தி மையம் என்ற பதிப்பகத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.சென்னை புத்தகக் காட்சியில் அவரது பதிப்பகத்தின் அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் ஊழல்களை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில்நூல்களாக வெளிட்டு வருகிறார் வி.அன்பழகன்.

தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!

நேற்றைய தினம் (11-01-2020) மக்கள் செய்தி மைய அரங்கை மூடச்சொல்லி புத்தக காட்சியை நடத்தும் பபாசி அமைப்பினர் நெருக்கடி கொடுத்துள்ளனர். தமிழக அரசுக்கு எதிரான புத்தகங்கள் மக்கள் செய்தி மைய அரங்கில் விற்கப்படுவதே காரணம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த காரணத்தை எழுத்துப் பூர்வமாக கேட்டிருக்கிறார் அன்பழகன். கடிதமாக கொடுத்தவுடன் நேற்றைய தினமேஅரங்கை காலி செய்திருக்கிறார்.

புத்தகக் காட்சியில் அரசின் அழுத்தங்கள் காரணமாக கருத்துச் சுதந்திரத்தை மிரட்டிய பபாசியின் செயலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது. இதைத் தொடர்ந்து பபாசியினருக்கு பத்திரிகையாளர் அன்பழகன் கொலை மிரட்டல் விடுத்ததாக பபாசி நிர்வாகிகள் மூலமாகப் பொய்ப்புகார் ஒன்றைப் பெற்றுள்ளது சென்னை மாநகர காவல்துறை.

இப்படிப் பெறப்பட்ட பொய்ப்புகாரில் ஜாமினில் வரமுடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்த காவல்துறை இன்று (12-01-2020) அதிகாலை ஐந்து மணியளவில் அன்பழகனை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்திருக்கிறது. இந்த பொய்வழக்கும் , கைது சம்பமும் அப்பட்டமான அத்துமீறல் - தமிழக அரசின் ஊழல்களை புத்தகமாக வெளியிட்டதற்காக காவல்துறை கைது செய்வது கருத்து சுதந்திரத்திற்கும் பத்திரிகை சுதந்திரத்திற்கும் விடப்பட்ட சவால். கருத்து சுதந்திரம் மீது நம்பிக்கை கொண்டோர் அனைவரும் கண்டிக்க வேண்டியது அவசியம் .

மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் கைதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.ஆட்சியாளர்கள் இட்ட பணியை நிறைவேற்ற பொய் வழக்கு போட்ட காவல்துறை , பொய்ப் புகார் கொடுத்த புத்தகக்காட்சி அமைப்பாளர்களை செனனை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. ஏற்கனவே பத்திதிகையாளர் அன்பழகன் மீது பல பொய்வழக்குகள் போடப்பட்டதும் குண்டர் சட்டம் ஏவப்பட்டதும் , நீதிமன்றத்தில் அந்த வழக்குகள் எதிர்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கவை. பொய் வழக்குகள் புனைந்தவர்கள் நீதியின் முன் நிச்சயமாக நின்றாக வேண்டும்.

கைதுச் செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் அன்பழகன் உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும் என தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. இவ்வாறு பாரதிதமிழன் கூறியிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ‘Chennai Book Fair-ல், அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகம் இருந்ததால் 'மக்கள் செய்தி மையம்' அரங்கின் அனுமதியை ரத்து செய்து, பத்திரிகையாளர் அன்பழகனையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

அன்பழகன் உடனே விடுவிக்கப்பட்டு, உரிம அனுமதியும் திருப்பித் தரப்பட வேண்டும்!’ என குறிப்பிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

சென்னை பத்திரிக்கையாளர் சங்க தலைவரும் மூத்த பத்திரிக்கையாளருமான திரு.V.அன்பழகன் இன்று அதிகாலை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. சென்னை புத்தக கண்காட்சியில் அவருக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்ட புத்தகங்களில், ஆளுக்கட்சிக்கு எதிரான கருத்துடைய புத்தகங்கள் இருந்ததுதான் இந்த கைதுக்கான பின்னணி என சொல்லப்படும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கிறது.

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற செயல்களை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட திரு.அன்பழகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு கூறியிருக்கிறார்.

இந்திய உழைக்கும் பத்திரிகையாளர்கள் சம்மேளனம் (IFWJ) செயலாளர் அசுதுல்லா ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், மக்கள் செய்தி மையத்தின் நிறுவனருமான அன்பழகன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்கள் செய்தி மையத்திற்கு அரங்கு அமைக்க முறையாக 36 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி அரங்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளே அந்த அரங்கைக் காலி செய்ய நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

மக்கள் செய்தி மையத்தின் புத்தகங்கள் அரசுக்கு எதிராக இருப்பதாக அந்த நோட்டிசில் கூறப்பட்டிருந்தது. பத்திரிகை மற்றும் புத்தகங்கள் என்பது கருத்துச் சுதந்திரத்தின் வெளிப்பாடு எனும் போது அரசுக்கு ஆதரவான பத்திரிகை, புத்தகங்களுக்கு மட்டுமே புத்தகக் கண்காட்சியில் இடம் தரப்படும் என்பது அடிப்படை சுதந்திரத்திற்கே எதிரானது.

அதை எதிர்த்து கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் BAPASI நிர்வாகிகளிடம் கேள்வி கேட்டதற்காக அன்பழகன் அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அன்பழகனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என அரசை இந்திய உழைக்கும் பத்திரிகையாளர்கள் சம்மேளனம் IFWJ கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா விடுத்த அறிக்கை: ‘மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் கைது செய்யப்பட்டு குமரன் நகர் R6 காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். தமிழக அரசின் ஊழல்களை மக்கள் செய்தி மையத்தின் சார்பில் புத்தகங்களாக தொடர்ந்து வெளியிட்டு வருபவர் பத்திரிகையாளர் வி.அன்பழகன். இவர் CUJ எனும் பத்திரிகையாளர் அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.

இவர் கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சியிலும் இதுபோன்ற புத்தகங்களை வெளியிட்டுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் பெற்று வெளியிடும் இது போன்ற புத்தகங்கள் முற்றிலும் உண்மை தன்மை கொண்டது.

புத்தக கண்காட்சியில் முறையாக பணம் செலுத்தி 101-ம் எண் ஸ்டால் மூலம் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் புத்தகங்களை விற்பனை செய்வதால் உடனடியாக ஸ்டாலை காலி செய்ய வேண்டும் என்று சொல்வது பல கேள்விகளை உருவாக்குகின்றன.

ஆதாரமற்ற புகார்களின் அடிப்படையில் அவருடைய புத்தகங்கள் இருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்கலாம். அப்படி இல்லை என்றால் அந்த ஊழல் புகாரில் சிக்கியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதை விட்டு விட்டு, உண்மையை மக்களிடம் சேர்க்கும் பணியை மேற்கொண்டும் ஊடகவியாளர் மீது இதுபோன்ற அச்சுறுத்தல்களை கைவிட வேண்டும்.

மூத்த பத்திரிகையாளர் தோழர் வி.அன்பழகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென நமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியிருக்கிறார்.

தமிழ் நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் விடுத்த அறிக்கை: ‘சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும், மக்கள் செய்தி மையத்தின் நிறுவனருமான தோழர் அன்பழகன் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட செய்தி அறிந்தோம். தொடர்ந்து தோழர் அன்பழகன் மீது பொய் வழக்குகளை பதிவதும், கைது செய்வதும் ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் செயலாகும்.

சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்கள் செய்தி மையத்திற்கு அரங்கு அமைக்க முறையாக 36 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி அரங்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இரண்டாவது நாளே அந்த அரங்கைக் காலி செய்ய நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் செய்தி மையத்தின் புத்தகங்கள் அரசுக்கு எதிராக இருப்பதாக அந்த நோட்டிசில் கூறப்பட்டிருக்கிறது.

எதுவாயினும் சட்ட ரீதியாக தான் எதிர்க்கொள்ள வேண்டும், இது போன்ற கைது நடவடிககளை மேற்க்கொண்டு பத்திரிகை சுதந்திரத்தையும், எழுத்துரிமையையும்,அதிகார பலம் கொண்டு அடக்குவதை ஒரு காலும் பொறுத்துக் கொள்ள முடியாது.பத்திரிகையாளர்கள் மீது நடைபெறும்

இது போன்ற சம்பவங்கள் கடுமையாக கண்டிக்க தக்கது.

தோழர் அன்பழகனை எவ்விதமான நிபந்தனைகள் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.’ இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கை: ‘மூத்த பத்திரிகையாளர் வி.அன்பழகன் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தனது மக்கள் செய்தி மையத்தின் வாயிலாக தமிழக அரசின் ஊழல்களை நூல்களாக வெளிட்டு வருபவர் வி.அன்பழகன். தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் இவர் தமிழக அரசின் ஊழல்களை விவரிக்கும் நூல்களை எழுதி வெளியிட்டு வருகிறார். சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் மக்கள் செய்தி மையத்தின் அரங்கில் இந்த நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

அதிமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் இந்த நூல்கள் விற்பனை செய்யப்பட கூடாது என்று கூறி அவரது அரங்கு மூடப்பட்டது. இதை தொடர்ந்து அன்பழகன் இன்று அதிகாலை அவரது இல்லத்தில் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும். அன்பழகன் அம்பலப்படுத்தியுள்ள ஊழல்களை ஆதாரங்களுடன் மறுக்க திராணியில்லாமல் பத்திரிகையாளரை கைதுச் செய்திருப்பது கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்.

கைதுச் செய்யப்பட்டுள்ள அன்பழகனை உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டுமென்றும் சென்னை புத்தக கண்காட்சியில் மூடப்பட்ட அவரது அரங்கம் மீண்டும் திறக்கப்பட வேண்டுமென்றும் கோருகிறோம்.’ இவ்வாறுஎம் எச் ஜவாஹிருல்லா கூறியிருக்கிறார்.

 

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment