சென்னை புத்தகக் காட்சி இன்று (03.01.2024) முதல் 19 நாட்கள் நடைபெறுகிறது. புத்தகக் காட்சி வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
உரைநடை, கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் ஆறு பேருக்கு வழங்கப்படும் பொற்கிழி விருதுகள் தவிர, ஒன்பது பபாசி விருதுகளும் வழங்கப்பட உள்ளது.
சென்னை நந்தனம் அருகே உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 47-வது சென்னை புத்தகக் காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தார். மேலும், ஒரு பதிப்பாளராக புத்தகக் காட்சியில் பங்கேற்பதாகத் தெரிவித்தார்.
சென்னை புத்தகக் காட்சி விழாவை ஏற்பாடு செய்யும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) புதன்கிழமை (03.01.2024) மாலை 4.30 மணிக்கு முதல்வர் இந்த நிகழ்வை தொடங்கி வைக்கிறார். 19 நாட்கள் நடைபெறும் புத்தகக் காட்சி வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும் என்று பபாசி தெரிவித்துள்ளது.
இந்த சென்னை புத்தகக் காட்சியில், உரைநடை, கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருதுகள் வழங்கப்படுகிறது. மேலும், 9 பேருக்கு பபாசி விருதுகளும் வழங்கப்படுகிறது.
சென்னை புத்தகக் காட்சியில் சுமார் 900 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தகக் காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி மையம், சாகித்ய அகாடமி, டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை, தேசிய புத்தக அறக்கட்டளை, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா, பிரிட்டிஷ் கவுன்சில், ஹார்பர்காலின்ஸ் மற்றும் சைமன் & ஷஸ்டர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் சென்னை புத்தகக் காட்சியில் பங்கேற்கின்றன.
தென்னிந்திய புத்த விஹார், புத்தா வாய்ஸ், எழுச்சி பப்ளிகேஷன் ஹவுஸ், தடாகம் பப்ளிகேஷன்ஸ் மற்றும் திருநங்கை பிரஸ், எல்.எல்.பி ஆகியவற்றுக்கும் ஸ்டால்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகம் கைவினைஞர்களுக்கு உதவுவதற்காகவும், அவர்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்துவதற்காகவும் ஒரு ஸ்டாலை அமைத்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் ஸ்டாலும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை புத்தகக் காட்சிக்கு தங்கள் அடையாள அட்டையை கொண்டு வருகிற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களைத் தவிர, மற்ற பொது பார்வையாளர்களிடம் ரூ.10 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“