Advertisment

டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி: தி.மு.க அரசு மீது இ.பி.எஸ் தாக்கு

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவுவதாகவும், டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இ.பி.எஸ் வலியுறுத்தல்

author-image
WebDesk
New Update
EPS at Madurai

சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த தம்பதி அய்யனார்- சோனியா. இவர்களது 4 வயது மகன் ரக்ஷன். கடந்த சில நாட்களுக்கு முன் ரக்ஷனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.

Advertisment

தொடர்ந்து காய்ச்சல் மேலும் தீவிரமடையவே, கடந்த திங்கள் அன்று சென்னை  எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ரக்ஷன் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதிப்படுத்தி செய்தனர்.

இதனை தொடர்ந்து டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் நேற்று திடீரென சிகிச்சை பலனின்றி சிறுவன் ரக்ஷன் உயிரிழந்தார். 

சுகாதார சீர்கேடு

சிறுவனின் உயிரிழப்புக்கு மாநகராட்சி ஊழியர்கள் குடியிருப்பு பகுதியை முறையாக பராமரிக்காததும், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததுதான் காரணம் என உறவினர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிறுவன் உயிரிழப்புக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசை வலியுறுத்தியுள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள இ.பி.எஸ், "சென்னை மதுரவாயல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அய்யனார் - சோனியா தம்பதியினரின் நான்கு வயது மகன் ரக்‌ஷன் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். 

குழந்தையை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் வசிக்கும் பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளதாகவும், சுகாதார சீர்கேடு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாகவும் செய்திகள் வருகின்றன.

அரசே இதற்கு காரணம்

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சுகாதார சீர்கேட்டை சரி செய்யாத இந்த விடியா திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன், டெங்கு பரவலை முற்றிலும் தடுக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் மெத்தனப் போக்கே சிறுவன் மரணத்திற்குக் காரணம்.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Greater Chennai Corporation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment