சர்வதேச செஸ் போட்டியில், சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவன் பிரக்னாநந்தா கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இவரின் சாதனையை கண்டு பலரும் வியந்து பாராட்டுகளை குவித்து வருகின்றனர். சென்னையை சேர்ந்த ரமேஷ் மற்றும் நாகலட்சுமி தம்பதியரின் மகனான பிரக்னாநந்தா சென்னை தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு பயில்கிறார். 12 வயதான பிரக்ஞானந்தா, கடந்த 2013ம் ஆண்டில் 8 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டி மற்றும் 2015ம் ஆண்டில் 10 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டி என இரண்டு போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்றவர். இதன் மூலம் 10 வயதிலேயே இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் வென்று சாதனைப் படைத்துள்ளார். ஒரு கிராண்ட் மாஸ்டராக மாற மூன்று நிலைகள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு உலக ஜூனியர் சாம்பியியன்ஷிப் போட்டியில் வெற்றிப்பெற்று தனது முதல் நிலையையும், கிரீஸ் நாட்டில் நடந்த ரவுண்ட் ராபின் போட்டியில் வென்று இரண்டாவது நிலையையும் பெற்றார்.
மேலும் கிராண்ட் மாஸ்டராக 2500 புள்ளிகள் எடுக்க வேண்டி இருந்தததையடுத்து, இத்தாலி நாட்டில் நடைபெற்ற கிரிடின் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பிரக்னாநந்தா கலந்துகொண்டார். அதில் 9வது சுற்றில் 2514 புள்ளிகள் பெற்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த புருஜெஸ்சர்ஸ் ரோலாந்தை எதிர்கொண்டார். இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து பிரக்ஞானந்தா ரேட்டிங்கில் 2500 புள்ளிகளைப் பெற்று இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை வென்றுள்ளார். மேலும் உலகிலேயே மிகக் குறைந்த வயதுடைய கிராண்ட் மாஸ்டர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் பிரக்னாநந்தா.
Indian prodigy R. Praggnanandhaa ???????? has become the 2nd youngest Grandmaster in history today.
He is the youngest Grandmaster alive in the world now!
Congratulations and well done @rpragchess pic.twitter.com/ekYW6pNHlf
— Chess.com - India (@chesscom_in) 23 June 2018
பிரக்னாநந்தாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சதுரங்க போட்டியில் சர்வதேச அளவில் தொடர் வாகைகள் சூடி உலகின் இரண்டாம் இளம் Grandmaster என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தி, இந்தியாவை பெருமையடையச் செய்த சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஆர்.பிரக்னானந்தா மென்மேலும் சாதனைகளைத் தொடர எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் pic.twitter.com/aOQvAF6dNS
— O Panneerselvam (@OfficeOfOPS) 24 June 2018
மேலும் இது குறித்து கருத்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள விஸ்வநாதன் ஆனந்த் கிராண்ட்மாஸ்டர் பட்டியில் இணைந்ததற்கு வரவேற்பும், பாராட்டும் பிரகனாநந்தா. விரைவில் நாம் சென்னையில் சந்திப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
Welcome to the club & congrats Praggnanandhaa!! See u soon in chennai?
— Viswanathan Anand (@vishy64theking) 24 June 2018
சிறுவன் பிரக்னாநந்தாவின் வெற்றிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Just 12 yrs old, Chennai boy R Praggnanandaah has become the second youngest Chess Grand Master ever!
Congratulations to him and his coach @RameshChess. This is truly an incredible achievement. https://t.co/p5RxSNEXbx
— Rahul Gandhi (@RahulGandhi) 24 June 2018
இந்தப் பட்டியலில், 2002ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின் முதலிடத்தில் உள்ளார். ஒட்டுமொத்தமாக உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2வது சிறுவன் எனும் பெருமையையும் பிரக்னாநந்தா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.