திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா கோவிலுக்கு வந்த சென்னை சேர்ந்த அண்ணன் தம்பி உட்பட ஐந்து பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிசிறந்த நிலையில் இரண்டு பேரும் உடல்நிலை அவர்களே மீட்டிங் மீட்டுள்ளனர் மேலும் 3 பேரின் உடலை திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு துறை என தேடி வருகின்றனர்.
சென்னை எக்மோர் அடுத்த நேரு பார்க் ஹவுசிங் போர்டில் குடியிருந்து வரும் ஜான்சன் மகன்கள் பிராங்கிளின் (23), ஆண்டோ (20), மற்றும் அவரது நண்பர்கள், அதே பகுதியைச் சேர்ந்த ஜியாவுதீன் மகன் தமிழரசன் (20) சென்னை சோலைப் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் கலைவேந்தன் (20) ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த மண்ட வெங்கடேஷ் மகன் மனோகர் (19) ஆகிய ஐந்து பேரும் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா கோவிலுக்கு வந்துள்ளனர்.
அப்படி வந்தவர்கள், அந்த பகுதியில் உள்ள சந்தன மாதா கோவில் அருகே கொள்ளிட ஆற்று தண்ணீரை பார்த்ததும் தண்ணீரில் இறங்கி குளிக்க முடிவு செய்து தண்ணீரில் இறங்கி குளித்த பொழுது எதிர்பாராதமாக தண்ணீரில் 5 பேரும் மூழ்கினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களில் கலை வேந்தன் மற்றும் தமிழரசன் ஆகிய இரண்டு பேரையும் அருகில் இருந்தவர்கள் இறந்த நிலையில் மீட்டுள்ளனர்.
பின்னர், இச்சம்பவம் பற்றி உடனடியாக திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கும் தீயணைப்புகள் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளனர் அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் கொள்ளிட ஆற்றில் மூழ்கிய மூன்று பேர் நிலை குறித்து விசாரணை செய்தனர்.
இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட தமிழரசன் மற்றும் கலைவேந்தனின் உடல்களை திருக்காட்டுப்பள்ளி போலீசார் கைப்பற்றி குறைந்த பரிசோதனைக்காக திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தண்ணீரில் மாயமான மண்ட மனோகர், ஆண்டோ, பிரான்கிளின் ஆகிய மூன்று பேரில் உடல்களை தீயணைப்பு துறையினர் கொள்ளிட ஆற்றில் இறங்கி தண்ணீரில் மாயமான மூன்று பேரின் உடல்நிலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“