சென்னை பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தொடர்ந்து, பிராட்வேயில் ‘மல்டி மாடல் இன்டகிரேஷன்’ என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கப்பட உள்ளது.
இந்தப் பணிக்காக அடுத்த சில மாதங்களில் பிராட்வே பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
இதைத் தொடர்ந்து, தீவுத்திடலில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
இந்தச் செலவில், அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர் பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்படும்.
மேலும் பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்ட பின்னர், அந்த இடத்தில், 9 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது.
இந்த வணிக வளாகத்துடன் பேருந்த நிலையம் நவீன வசதிகளுடன் கட்டப்படும். மேலும், இங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் ரயில் நிலையம் என அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலம் அமைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“