Advertisment

நவீன வசதிகளுடன் புதிய பிராட்வே பஸ் நிலையம்: அட்டகாசமான மாதிரி புகைப்படம் வெளியீடு

சென்னையின் மிகவும் பழமை வாய்ந்த பிராட்வே பஸ் நிலையம் ரூ.823 கோடியில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்படவுள்ள நிலையில், அதன் மாதிரி புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
Chennai Broadway bus terminus new look model photos released Tamil News

நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்படும் பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

chennai: சென்னையின் மிகவும் பழமை வாய்ந்த பேருந்து நிலையமாக பிராட்வே பஸ் நிலையம் இருந்து வருகிறது. கடந்த 2002-ம் ஆண்டு வரை இந்த பஸ் நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்கள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் காரணமாக கோயம்பேட்டுக்கு தென் மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், பிராட்வேயில் இருந்து மாநகர பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisment

புதிய பேருந்து முனையம் 

இந்நிலையில், பழமையான இந்த பஸ் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை வைத்து வந்தனர். இதைத் தொடர்ந்து, ரூ.823 கோடியில் நவீன வசதிகளுடன் வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து முனையமாக பிராட்வே பஸ் நிலையம் கட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தற்காலிக பஸ் நிலையம்

இதனிடையே, பிராட்வேயில் 'மல்டி மாடல் இன்டகிரேஷன்' என்ற ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிக்காக அடுத்த சில மாதங்களில் பிராட்வே பஸ் நிலையம் தீவுத்திடலுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. தீவுத்திடலில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5 கோடி செலவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன.

அதன்பிறகு பிராட்வே பஸ் நிலையம் இடிக்கப்பட்டு போக்குவரத்து முனையம் அமைக்கும் பணி தொடங்கப்படுகிறது. பிராட்வே பஸ் நிலையம் இருக்கும் இடத்தில் 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கொண்ட பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதேபோல், குறளகம் கட்டிடம் இடிக்கப்பட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இங்கிருந்து மெட்ரோ ரெயில் நிலையம், புறநகர் ரெயில் நிலையம் என அனைத்தையும் இணைக்கும் வகையில் 7 நடை மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.

மாதிரி புகைப்படம் வெளியீடு 

இந்த நிலையில், நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள சென்னை பிராட்வே பஸ் நிலையத்திற்கான மாதிரி புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 4 மாடல்கள் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் ஒன்று தேர்வு செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment