சென்னை மாநகராட்சி பட்ஜெட் 2023-24ல், பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க ‘மக்களைத் தேடி மேயர்’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 வரையுள்ள பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகளை களையும் பொருட்டு, மாநகராட்சி மேயர் மாதத்திற்கு ஒரு முறை ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில் மனுக்களை நேரடியாக பெறும் வகையில் மக்களை தேடி மேயர் திட்டம் 2023-24ம் நிதியாண்டு முதல் செயல்படுத்தப்படும், என்று மேயர் தெரிவித்தார்.
இத்திட்டம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என பெருநகர சென்னை
சென்னை மக்கள் இந்த முயற்சியை வரவேற்றாலும், மேயர் குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு வார்டுகளை இணைத்து கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.
ஒவ்வொரு மண்டலமும் அதன் கட்டுப்பாட்டில் 10-14 வார்டுகள் உள்ளன, மேலும் மேயரை சந்திக்க விரும்பும் பலர் இருக்கலாம். ஒவ்வொரு மாதமும் மண்டல அலுவலகங்களில் இவ்வளவு பெரிய கூட்டம் நடக்கும் போது, நாங்கள் மனுக்களை மட்டும் தான் கொடுக்க முடியும்.
மேயருடன் கலந்துரையாடல் எதுவும் இருக்காது. மாறாக, ஒரு மாதத்திற்கு இரண்டு முறை குறைந்தபட்சம் மூன்று முதல் நான்கு வார்டுகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டத்தை குடிமை அமைப்பினர் ஏற்பாடு செய்யலாம், எனவே எங்கள் குறைகளை தெரிவிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சென்னைவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சென்னை மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோரின் வாட்ஸ்அப் எண்களுக்கு நாங்கள் புகார் அளித்துள்ளோம், ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை, பொதுமக்களை சந்திப்பதைத் தவிர, மேயர் சமூக ஊடக தளங்களிலும் செயலில் இருக்க வேண்டும்.
பெரும்பாலான மக்கள் தினக்கூலிகளாக இருப்பதால், மண்டல அலுவலகத்தில் மேயருக்காக காத்திருப்பது சிரமமாக இருக்கும். வார்டுகளில் கூட்டம் நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும். இதனால் அவர்கள் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று சென்னை மக்கள் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“