Advertisment

கட்டட அனுமதி கட்டணம் உயர்த்தப்பட்டதா? சென்னை மாநகராட்சி விளக்கம்

வீடு கட்டுவதற்கான கட்டட அனுமதி கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியாகும் செய்திக்கு சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai building plan approval fees

Chennai building plan approval fees

ஊராட்சிகளில் சதுர அடிக்கு, 15 முதல் 27 ரூபாய் வரை என்றும் அறிவிக்கப்பட்டன.

Advertisment

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் கட்டட அனுமதிக்கான கட்டணம் உயர்த்தப்பட்டதாக அரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்கு சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட செய்தியில்,

‘கட்டட அனுமதி கட்டணமாக ஒரு சதுர அடிக்கு ரூ.100 வசூலிக்கப்படும். ( அதாவது ஆயிரம் சதுர அடி வீடு கட்ட ஒரு லட்சம் ரூபாய் கட்டணம்) இத்திட்டம் தனிவீடு கட்டும் நோக்கத்திற்கு வழிவகை செய்யும் வகையில் அமைந்துள்ளது. வணிக நோக்கத்தோடு கட்டுபவா்களுக்காக கொண்டுவரப்படவில்லை.

இதன்படி, கட்டட அனுமதி கோரும் போது, வளா்ச்சி கட்டணம் ரூ.15, கட்டட அனுமதி ரூ.600, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா் நலநிதி கட்டணம் ரூ.267, சாலைவெட்டு சீா் செய்யும் கட்டணம் ரூ.197 என சதுர மீட்டருக்கு ரூ.1,076 வசூலிக்கப்படும்.

இதற்கு முன்பு அனுமதி அளிக்கும் போது சதுர அடிக்கு ரூ.99.70 வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு சில மாநகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் கட்டடங்களுக்கான இணைய வழி அனுமதி கட்டணம் சற்று அதிகமாக இருந்ததை அரசு கவனத்தில் கொண்டு, அந்தக் கட்டணத்தையும் வெகுவாகக் குறைத்துள்ளது. பொதுமக்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி எளிய முறையில் வீடு கட்டுவதற்கான அனுமதியை பெறலாம்’, எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment