Advertisment

சென்னை போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்

சென்னையில் போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

author-image
WebDesk
May 29, 2023 18:59 IST
Chennai bus strike Tamil News

CITU's transport corp strike Chennai

Chennai bus strike Tamil News: சென்னையில் அரசு பேருந்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு பேருந்துகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியார் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சைதாப்பேட்டை, கேகே நகர், வடபழனி, ஆவடி உள்ளிட்ட பணிமனைகளை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பணி முடிந்து வீடு திரும்பும் பயணிகள் போதிய பேருந்துகள் வராததால் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி, ஆவடி அரசு பேருந்து பணிமனைகளில் இருந்து பேருந்துகள் வெளியே வராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Bus #Strike #Chennai #Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment